அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - ஸ்டாலின்
பதிவு : ஜூன் 08, 2019, 05:45 PM
கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டது, முக்கியமான நிபந்தனை எனத் தெரிவித்துள்ளார்.கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே அணுக்கழிவு மையம் கட்டுவதற்கு ஜூலை 10ஆம் தேதி  பொதுமக்கள் "கருத்துக் கேட்புக் கூட்டம்" நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தமிழக மக்களின் உயிரைப் பணயமாக வைத்து,அணுக்கழிவு வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை "சோதனைக்கூடப் பொருட்களாக" ஆக்குவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்ற சந்தேகமே எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.எனவே, மத்திய அரசும், அதிமுக அரசும் மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு மையம் கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

52 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

654 views

பிற செய்திகள்

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

14 views

காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் : ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை, 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

38 views

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

13 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

15 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

56 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.