தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை.க்கு ரூ. 5 லட்சம் அபராதம்
பதிவு : ஜூன் 08, 2019, 05:00 PM
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு தடை விதிக்க கோரி டாக்டர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு  தடை விதிக்க கோரி, தமிழ்நாடு டாக்டர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், இதுபோன்ற படிப்புகளை நடத்த அனுமதித்தால், அதில் படித்து முடித்தவர் அந்த பிரிவில் நிபுணர் என மக்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார் . மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் டிப்ளமோ படிப்புகளை வழங்க பல்கலைக்கழகத்துக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை மதிக்காமல் செயல்படுவதற்கு  கண்டனம் தெரிவித்த நீதிபதி, பல்கலைக்கழகத்துக்கு 5  லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 

பிற செய்திகள்

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

11 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

37 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

37 views

முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.

29 views

18 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

13 views

மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி - சுகாதாரத்துறை ஆய்வு செய்யக் கோரிக்கை

மதுரை திருமங்கலம் அடுத்த சுந்தரம்குண்டு கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.