தொலை நிலை கல்வி மூலம் மருத்துவம் சார்ந்த படிப்பு : தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் அறிவிப்பு - செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
பதிவு : ஜூன் 08, 2019, 04:46 AM
தொலைநிலை கல்வி திட்டத்தின்கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தொலை நிலைக் கல்வி திட்டத்தின் கீழ், ஓராண்டு மற்றும் ஈராண்டு மருத்துவ பட்டய படிப்புகளை நடத்துவது சம்பந்தமான அறிவிப்பை, தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் 2018  பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசிடமோ, மருத்துவ கவுன்சில் இடமோ எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறி, தமிழ்நாடு டாக்டர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பல்கலைக் கழகத்தின் இந்த அறிவிப்பு செல்லாது என உத்தரவிட வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். எஸ். சுந்தர், பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என உத்தரவிட்டதுடன், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை, அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

11 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

10 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

41 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

15 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

89 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.