இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - வாகனங்கள் சேதம் : பார் நாகராஜ் உட்பட 14 பேர் கைது
பதிவு : ஜூன் 08, 2019, 03:23 AM
பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர்கள் சிபின் மற்றும் சபரீஸ்வரன். இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர்கள் சிபின் மற்றும் சபரீஸ்வரன்.  இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் தனது நண்பர்களுடன் சென்ற சிபின், சபரீஸ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி 
பார் நாகராஜுக்கு,  சபரீஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த பார் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களும், சிபின் ஆதரவாளர்களும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள்  அளித்த புகாரின்பேரில், பார் நாகராஜ் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1264 views

பிற செய்திகள்

தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

5 views

சென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை

சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

5 views

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

8 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

4 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.