நடுவரின் கவனக்குறைவால் ஆட்டமிழந்த கெயில் : தொடரும் நோ-பால் சர்ச்சை
பதிவு : ஜூன் 08, 2019, 03:08 AM
உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா மோதிய ஆட்டத்தில் அதிரடி வீரர் கெயிலுக்கு நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா மோதிய ஆட்டத்தில் அதிரடி வீரர் கெயிலுக்கு நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.  வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில், 289 ரன் இலக்கை நோக்கி மேற்கு இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில்,லீவிஸ் விளையாடினர். ஸ்டார்க் வீசிய 5 வது ஓவரில் கெயில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்கு முந்தைய பந்தை ஸ்டார்க் நோ பாலாக வீசியது ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. நோபாலாக வீசப்பட்ட பந்திற்கு  நடுவர் பிரி ஹிட் வழங்காததால் கெயில் ஆட்டமிழக்க நேரிட்டது, மேலும் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முக்கியத்துவம் வாய்ந்த உலக கோப்பை போட்டியில் கவனமின்றி செயல்பட்ட நடுவரை நீக்கம் செய்ய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

2980 views

பிற செய்திகள்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் - ஸ்ரீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

1 views

2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7

26 views

தென் மாநில அளவிலான செஸ் போட்டி : கண் பார்வையற்றவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

4 views

சிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

3262 views

டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் ?

நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

1183 views

இந்தியா Vs தெ.ஆ - முதலாவது டி.20 இன்று தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு தொடக்கம்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடக்கிறது.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.