"இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை" - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்
பதிவு : ஜூன் 08, 2019, 02:32 AM
இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்பட அனைத்து தரப்பினருக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வாரிய  செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  பஞ்சாயத்து மற்றும் நகரப் பஞ்சாயத்து உதவி இயக்குநர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். போதிய மழை பெய்யாததும், தமிழகத்தில் வட மாநிலங்களில் உள்ளது போன்ற வற்றாத ஜீவ நதிகள் இல்லாததும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதுதவிர, தமிழகத்தில் கடந்த 2016 முதல் இதுவரை 2017 ஆம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் வழக்கத்தை விட மழை குறைவாகவே பெய்துள்ளது. மேலும், கடந்த 50 ஆண்டுகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையளவு வழக்கமான அளவை விட குறைவாக பெய்துள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டமும் 16 மாவட்டங்களில் 15 மீட்டருக்கும் கீழாக சென்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என்றும், பிளாக் வாரியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வரைபடம் வெளியிட உள்ளதாகவும், இதன் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைப்பது மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவது போன்றவற்றை திட்டமிட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வரைபடம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஊரக மேம்பாட்டு  ஆணையம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர்  அலுவலகங்களில் கிடைக்கும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3002 views

பிற செய்திகள்

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

3 views

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது

நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 views

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

12 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

25 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

2791 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.