அம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்
பதிவு : மே 27, 2019, 02:52 AM
சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. சென்னையை அடுத்த, மணலி, சடையங்குப்பம், பர்மா நகரில் உள்ள பீலிக்கான் முனிஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, கடந்த, 17 ம் தேதி, கொடியேற்ற நிகழ்வுடன் விழா துவங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. தீச்சட்டி ஏந்தியும், காவடி சுமந்தும், அலகு குத்தியும், ராட்சத வேல், கூண்டு வேல் அணிந்தும், நகரின் முக்கிய வீதிகளில், பக்தர்கள் வலம் வந்தனர். ஊர்வலத்தின் முன், முளைப்பாரி தலையில் சுமந்தபடி பெண்கள் அணிவகுத்தனர். பின்னர், கோவில் முன் தயார் செய்து வைத்திருந்த, அக்னி குண்டத்தில், பக்தி பரவசத்துடன் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பிற செய்திகள்

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

6 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

7 views

"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

13 views

பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

8 views

சென்னை மீனவர்கள் 7 பேர் மாயம்

சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.