"திராவிடம் உயிரோடு இருப்பதை வெற்றி காட்டுகிறது" - கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை
பதிவு : மே 25, 2019, 12:01 AM
திமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என கனிமொழி கூறியுள்ளார்.
திமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என  கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற அவர், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான கருணாநிதி நினைவிடத்தில், வெற்றிச் சான்றிதழை வைத்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மை வெற்றிபெறச் செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அந்த தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்ற கனிமொழி, கருணாநிதி இல்லாத ஒன்றுதான் குறை என்றார். தமிழகத்திலும், கேரளாவிலும், பாஜக தோற்றிருப்பது திராவிடம் உயிரோடு இருப்பதை காட்டுவதாக கூறிய கனிமொழி, மாநிலங்களவையில் பணியாற்றியது போல், மக்களவையிலும் பணியாற்றுவேன் என்றார். இதன்போது, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர். டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் , திருவாரூரில் வென்ற பூண்டி கலைவாணன் ஆகியோரும் வெற்றிச் சான்றுடன் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

207 views

பிற செய்திகள்

காவிரி விவகாரம் : "கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்" - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

26 views

கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

21 views

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

31 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

9 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

82 views

அலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.