கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி - மல்லிகார்ஜூனா, வீரப்ப மொய்லி அதிர்ச்சி தோல்வி
பதிவு : மே 24, 2019, 07:30 AM
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், பா.ஜ.க. 25 இடங்களை வென்றுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், பா.ஜ.க. 25 இடங்களை வென்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆளுங்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளன. தும்கூர் தொகுதியில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவகவுடா, 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல அவரது பேரனும், முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிக்கில், மண்டியா தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.

ஆனால், தேவகவுடாவின் மற்றொரு பேரனான பிரஜ்வால் ரெவேனா, ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்றார். மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குல்பர்கே தொகுதியில் தோல்வி அடைந்தார். இதே போன்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியும் கர்நாடகாவில் தோல்வியை சந்தித்தார். 

தொடர்புடைய செய்திகள்

சி.பி.ஐ. இயக்குநர் தேர்வுக்கு கார்கே எதிர்ப்பு

கார்கே எதிர்ப்பு வழக்கமான ஒன்று என அருண்ஜேட்லி கருத்து

42 views

பிற செய்திகள்

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

22 views

திருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்

திருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

55 views

92 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு : அணிவகுப்பு மரியாதை ஏற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஹைதராபாத்தில், தேசிய காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்ற 92 ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

152 views

"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை" - வெங்கய்யா நாயுடு பேச்சு

எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

37 views

அருண் ஜெட்லி கடந்து வந்த பாதை...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மரணமடைந்தார்.

620 views

உதகை : 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரியில் 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.