தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்
பதிவு : மே 24, 2019, 05:50 AM
நாட்டின் மிக பழமையான கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தது 3 மாநிலங்களில் இருந்து 11 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது 4 மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகள் பெற்று, 4 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்த்தை பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கோட்டைகளான மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. தமிழகத்தில் 2 தொகுதிகள் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதி என வெறும் மூன்றே தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளன . ஏற்கனவே 2014ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்க வேண்டிய அபாயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தின் 2 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது . இதனால் அக்கட்சிக்கும் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3433 views

பிற செய்திகள்

ஃபரூக் அப்துல்லா, பாதுகாப்பு சட்டத்தில் கைது

காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 views

மோடி அரசின் மீது ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டை வைக்கவில்லை - அமித்ஷா

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்து கட்டுரையில், மோடி தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி தான் இந்திய அளவில் பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமான வழிகளை உருவாக்கியதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

65 views

பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்

தமது பிறந்த நாளை கொண்டாட குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்.

35 views

பிரதமர் மோடி பிறந்தநாள் - சிறப்பு யாக பூஜை

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

5 views

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் அபாயம் : இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தகவல்

கச்சா எண்ணெய் விலை தற்போதைய நிலை தொடருமானால், பெட்ரோல் , டீசல் சில்லரை விற்பனை விலை பத்து சதவீதம் வரை உயரும் என இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் எம்.கே. சுரானா தெரிவித்துள்ளார்.

3 views

காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு அனுமதி

ஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.