விஸ்வரூபம் எடுத்த பிரதமர் நரேந்திரமோடி
பதிவு : மே 24, 2019, 12:55 AM
மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது.
மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, புதிய சாதனை படைத்துள்ளார். மக்களவை தேர்தலில், பாஜகவின் இமாலய வெற்றியின் மூலம் தேசிய அரசியலில், பிரதமர் நரேந்திரமோடி, ஒரு வலுவான - சக்தி மிக்க - அசைக்க முடியாத மாபெரும் தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் 2- வது முறையாக மீண்டும் 
5 ஆண்டுகளுக்கு ஆட்சியை உறுதி செய்து, பிரதமர் நரேந்திரமோடி புதிய சாதனை படைத்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் கடைசி நிலவரப்படி, ஆட்சிக்கு தேவையான 272 என்ற மேஜிக் நம்பரை தாண்டி, தனிப்பெரும் கட்சியாக பாஜக 300 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியை மீண்டும் உறுதி செய்த பிரதமர் மோடி, இமாலய வெற்றிக்கு, ஓற்றை முகமாக விளங்குகிறார். நாடு முழுவதும் சுற்றி சுழன்று, பிரதமர் மோடி மேற்கொண்ட சூறாவளி தேர்தல் பிரசாரம் பாஜகவுக்கு இமாலய வெற்றியை கொடுத்துள்ளது. ஜி.எஸ்.டி விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரபேல் போர் விமான ஊழல்  என எதிர்க்கட்சிகள் பிரயோகித்த குற்றச்சாட்டுக்கள் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. மாறாக, துல்லிய தாக்குதல் - தீவிரவாதிகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கை - மேக் இன் இந்தியா திட்டம் - விவசாயிகளுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, பாஜகவுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1265 views

பிற செய்திகள்

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

5 views

கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

147 views

சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு

சோனியாகாந்தி, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

11 views

அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்...

மக்களவையில், அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

84 views

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா​ர்​.

131 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.