புதுச்சேரி அருகே உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் தேரோட்டம்
பதிவு : மே 18, 2019, 01:40 AM
புதுச்சேரி அருகே உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரி அருகே உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம்  நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த சுவாமியை ஏராளமாக பக்தர்கள் கண்டு தரிசனம் செய்ததோடு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அரங்கநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழாபுதுக்கோட்டை அருகே, திருவரங்குளத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.  கோயிலின் ஐதீக முறைப்படி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதலில் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க,  பின்னர் அனைத்து சமூக மக்களும் ஒன்றாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தருகே எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, அதிர்வேட்டுகள் வெடிக்க கோலாகலமாக கருடாழ்வார் பொறித்த கொடியை, கொடிமரத்தில் ஏற்றி பிரம்மோற்சவம் தொடங்கப்பட்டது. பின்னர் வரதராஜ பெருமாள் திருவீதியுலா நடைபெற்றது. கொடியேற்ற உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழாகன்னியாகுமரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில், வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஓம் சக்தி... பராசக்தி... என பக்தி கோஷம் முழங்க, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

திருமறைநாதர் கோயில் தேரோட்டம்மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட கோயில் வைகாசி விஷாக தேரோட்டம் களைகட்டியது. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில், பாண்டிய மன்னன் அரிமர்த்தனால் கட்டப்பட்ட திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி விஷாக திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்ற நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், திருமறைநாதர் சுவாமியும், அம்பாளும் எழுந்தருள, நான்கு மாட வீதிகளில் தேர் ஆடி அசைந்து வந்தது. தேரை ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

மழை வேண்டி காமாட்சி அம்மன் கோயிலில் யாகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில்  மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏழு கும்பங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, பதினொரு வகையான அபிஷேகங்கள் நடைப்பெற்றன. சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காளியம்மன் கோவிலுக்கு ரூ.15 லட்சத்தில் ஐம்பொன் தேர்திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே , நெய்க்காரப்பட்டி ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் தேரை தானமாக வழங்கியுள்ளார். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், பழனியைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் என்ற பக்தர் 20 அடி உயரமுள்ள ஐம்பொன் தேர் செய்து  தானமாக அளித்துள்ளார்.சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடத்திய பின்னர் உற்சவர் சிலை ஏற்றப்பட்ட தேர், கோவிலை வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

பிற செய்திகள்

8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு வரும் முன் நிறைவேற்ற துடிப்பதா? - ஸ்டாலின் கேள்வி

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

13 views

காசி மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

இளம்பெண்களை சீரழித்து பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆவணங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

36 views

மாஸ்க் அணியாதவரை கண்டறியும் கேமரா - அண்ணா பல்கலை. மாணவர் அசத்தல்

மாஸ்க் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்களை, கண்காணித்து கண்டுபிடிக்கும் நவீன கண்காணிப்பு கேமராவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராகுல் புகழேந்தி உருவாக்கியுள்ளார்.

19 views

சென்னையில் 1,146 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 20,993

சென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

30 views

உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

63 views

மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.