கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் : குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு
பதிவு : மே 17, 2019, 11:48 PM
கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். கரூரில் இருந்து முசிறி நோக்கி சென்ற காரில் 7 பேர் பயணம் செய்துள்ளனர். மகாதானபுரம் என்ற இடத்தில், பேருந்து ஒன்றை கார் முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.  இதில், காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட 3 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த அருணா, கோமதி ஆகிய இருவரும், சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அருணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து கிரேன் மூலம், கார் மற்றும் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுனர் முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

விளைநிலங்களில் தோண்டிய போது கிடைத்த அபூர்வ சிலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பெருமாள்பட்டி ஆவுடையாபுரம் பகுதியில் கருப்பையா என்பவரின் விளைநிலத்தில் உழவு பணிக்காக தோண்டும்போது சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சுவாமி கற்சிலை ஒன்று கைகள் மட்டும் சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.

138 views

பேரூராட்சியின் செயல் அலுவலர் மீது முறைகேடு புகார் - சஸ்பெண்ட் செய்து பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியின் செயல் அலுவலர் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

439 views

4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

62 views

ஊரடங்கு காலத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்த மாணவர்கள்

உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

99 views

தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது.

19 views

சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்

கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.