ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த 2 பேர் கைது
பதிவு : மே 17, 2019, 11:44 PM
ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சித்தூரில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி அருகே செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பத்துக்கும் மேற்பட்டோர் செம்மரங்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க முயன்ற போது, மரங்களை விட்டு விட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில் விழுப்புரத்தை சேர்ந்த ஆண்டி மற்றும் தர்மன் ஆகியோரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து, அவர்கள் விட்டுச் சென்ற 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.