கமல் மீதான புகாருக்கு வீடியோ ஆதாரம் கேட்டுள்ளோம் - சத்யபிரத சாஹூ
பதிவு : மே 17, 2019, 11:25 PM
கமல்ஹாசன் மீதான புகார்களை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரம் கேட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் மீதான புகார்களை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரம் கேட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளபட்டியில், காந்தியின் படுகொலை குறித்து பேசிய கமல்ஹாசன், கோட்சே குறித்து தெரிவித்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் பேச்சுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதசாஹூ,  கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்து உள்ளதாகவும்,  இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரம் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.  தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் பெயர் இடம் பெற்றிருந்த விவகாரம் தொடர்பாக, யாராவது புகார் அளித்தால், அதன் மீது விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.