300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் - அமித் ஷா உறுதி
பதிவு : மே 17, 2019, 11:08 PM
நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.மக்களவை தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக சந்தித்தனர்.  பா.ஜ.க. அரசின் பல்வேறு திட்டங்களால் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன் அடைந்துள்ளதாக அப்போது அமித்ஷா தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஆட்சியில் விலை உயர்வோ, ஊழல்களோ நடைபெறவில்லை என்றும் மக்கள் பாதுகாப்பாக இருந்ததாக  உணர்ந்தார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் 6 மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் தற்போது 16 மாநிலங்களில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒவ்வொரு புதிய திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்ததாக தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் கொண்டு வந்த நலத்திட்டங்கள் வெற்றியை பெற்றுத் தரும் என்றும் அமித்ஷா  நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.