தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பதிவு : மே 17, 2019, 11:05 PM
வரும் 23 ஆம் தேதி மக்கள் முடிவு தெரிந்து விடும் அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
நாட்டின் பொதுத் தேர்தல் முடிவடைய உள்ள 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பு பிரதமர் செய்தியாளர்களை சந்திப்பது ஆச்சரியமாக உள்ளதாகவும், முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை பிரதமர் நடத்துவது முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23 ஆம் தேதி மக்கள் முடிவு தெரிந்து விடும், அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக அமைந்து  இருந்ததாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, மோடி தான் என்ன பேச வேண்டுமோ அதனை எவ்வித தடையுமின்றி பேசியதாகவும், ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அவ்வாறு செயல்பட ஆணையம் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். மோடி பிரசாரம் செய்ய ஏதுவாக பொதுத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்திருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜ.க. மற்றும் மோடி அளவுக்கு அதிகமான பணத்தை கொண்டிருந்ததாகவும், காங்கிரஸ் உண்மையை மட்டும் நம்பி மக்களை சந்தித்ததாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். கடந்த தேர்தலில் குறைந்த அளவில் வெற்றி பெற்ற நிலையிலும்,  ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக கூறுவதில் பெருமைபடுவதாக ராகுல் காந்தி கூறினார்.நரேந்திர மோடி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மரியாதை உள்ளது என்றும், அவரது குடும்பத்தை பற்றி தாம் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். மோடி விருப்பப்பட்டால் தமது குடும்பத்தை பற்றி விமர்சித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். முதல் முறையாக பிரதமர் செய்தியாளர்களை சந்தித்த நேரத்திலேயே, ராகுல் காந்தியும் செய்தியாளர்களை சந்தித்ததால் பரபரப்பான நிலை உருவானது

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

67 views

3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்

ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.

68 views

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

172 views

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.

278 views

பிற செய்திகள்

எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிகை விபரங்களை தற்போது காணலாம்..

194 views

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்

நாட்டின் மிக பழமையான கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

180 views

"கேரளாவில் அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று" - பினராய் விஜயன்

கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று என்று அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

378 views

பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களின் வெற்றிகளின் ஒரு தொகுப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

115 views

எதிர்கட்சி அந்தஸ்தை இந்த முறையும் இழந்த காங்கிரஸ்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

323 views

அமேதியில் ராகுல் தோல்வி, வயநாட்டில் அமோக வெற்றி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.