எங்களுடைய சாதனைகளை நினைத்தால் பெருமையாக உள்ளது - மோடி
பதிவு : மே 17, 2019, 10:59 PM
பா.ஜ.க. அரசின் 5 ஆண்டு சாதனைகளை நினைத்தால் பெருமையாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. அரசின் 5 ஆண்டு சாதனைகளை நினைத்தால் பெருமையாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மாலை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல் மனநிறைவை தந்து உள்ளதாகவும், வரலாற்று சிறப்பு மிக்க பிரசாரத்தை பாஜக செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2014 மே 17ஆம் தேதி நேர்மையான ஒரு அரசு பிறந்ததாக கூறிய அவர், இந்திய தேர்தல் வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு பெரும்பான்மை அரசு, மீண்டும் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவித்தார். கடந்த இரு தேர்தலின் போதும் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய மோடி, ஒரு பலம் பொருந்திய அரசு இருந்ததால், ஐ.பி.எல். போட்டி மட்டுமின்றி, ரம்ஜான், தேர்வுகள் என பல முக்கிய நிகழ்வுகள் அமைதியான முறையில் நடந்துள்ளதாக தெரிவித்தார். பல தடைகளை கடந்து வந்திருப்பதாகவும், தங்களுடைய சாதனைகளை நினைத்தால் பெருமையாக இருப்பதாகவும் மோடி அப்போது தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.