திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா? என விசாரணை
பதிவு : மே 17, 2019, 12:14 AM
மாற்றம் : மே 17, 2019, 12:22 AM
திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்துவந்தவர் கவுதமன்.இவரது அண்ணன் கோவர்த்தன‌ன் அதிமுக நகர மாணவரணி தலைவராக உள்ளார்.இந்த நிலையில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கவுதமன் அவரது தந்தை ராஜூ, தாய் கலைச்செல்வி ஆகியோர் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.வீட்டில் இருந்த ஏசி இயந்திரம் வெடித்து அதனால் ஏற்பட்ட தீ விபத்தால் மூவரும் இறந்த‌தாக கூறப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் ,கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் சோதனையிட்டபோது, மண்ணென்னை கேன் உள்பட சில தடயங்கள் சிக்கியுள்ளன.இதனால் மூவரும் தீயிட்டு கொளுத்தப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் அதே வீட்டில் தங்கியிருந்த கோவர்த்தன‌ன் எந்த காயமும் இன்றி தப்பியதும், தந்தை ராஜி வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த‌தும் போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.இதையடுத்து சம்பவம் நடந்த வீட்டை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளார்.பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்காக காத்திருக்கும் திண்டிவனம் போலீசார், அதன் பின் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதனால், திண்டிவனம் ஏசி வெடி விபத்து சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

ஆளுநரை சந்தித்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

23 views

தமிழகத்தில் புதிதாக 1,091 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

70 views

ராசிபுரத்தில் மாவு பூச்சி தாக்குதல் - மரவள்ளி பயிர் சேதம்

ராசிபுரம் அருகே மாவு பூச்சி தாக்குதல் காரணமாக சுமார் ஆயிரம் ஹெக்டேர் மரவள்ளி பயிர் சேதம் அடைந்தது.

10 views

ஐஐடி உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பான வழக்கு - மத்திய மனிதவளத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை ஐ.ஐ.டியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்,பேராசிரியர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அறிவிக்ககோரிய வழக்கில் மத்திய மனிதவளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

24 views

"நெல் கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

நெல் கொள்முதல் விலையை 3,ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

24 views

ஆண் குழந்தை கடத்தல் விவகாரம் : "காதலனை கரம்பிடிக்க குழந்தையை கடத்தினேன்" - பதற வைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்

திருப்பத்தூரில், காதலனை நம்ப வைப்பதற்காக பச்சிளம் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.