போஃபர்ஸ் ஊழல் : மீண்டும் விசாரிக்க அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ...
பதிவு : மே 16, 2019, 05:21 PM
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க, அனுமதி கோரி, டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சிபிஐ திரும்பப் பெற்றது.
போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் சிபிஐயின், குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. மாறாக வழக்கறிஞர் அகர்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீடு செய்ய சிபிஐக்கு இருந்த கால அவகாசம் ஆன 90 நாட்களுக்குள் சிபிஐ மேல்முறையீடு செய்யாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் தங்களுக்கு போதிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் எனவே இந்த bofors வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

"புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை" - நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

14 views

தமிழக ராணுவ வீரர் வீரமரணம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்

ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

34 views

கொரோனா மரணம் - கொடியது

புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவர் உடலை சவக்குழியில் தூக்கி வீசும் அவலம்

33 views

"பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை" - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்

15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது.

20 views

இந்தியா Vs சீனா - மோதல் முதல் பேச்சுவார்த்தை வரை...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

474 views

"சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு" - முதலமைச்சர் பினராயி விஜயன்

ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.