சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
பதிவு : மே 16, 2019, 05:14 PM
சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. விண்ணப்பங்களை பெறுவதற்காக சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் குவிந்தனர். மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சாஸ்திரி, விண்ணப்பங்களை வழங்கினார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க மே 31ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழக அரசு வகுத்துள்ள இட ஒதுக்கீட்டின்படி, மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

வாங்க குவிந்த மாணவர்கள், மாணவிகள் 
 

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை சட்டக்கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தொடங்கி வைத்தார். பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவினருக்கு 250 ரூபாய், மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய் என்று விண்ணப்பத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசிநாள் மே 31ஆம் நாள் மாலை 5 மணிக்குள் கல்லூரியில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இன்று காலை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

483 views

5ஆம், 8ஆம் வகுப்புகளுக்குக்கு பொதுத் தேர்வு : தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

2832 views

பிற செய்திகள்

நங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது.

8 views

ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.

18 views

"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

17 views

பிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

7 views

முல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா

முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.

11 views

நாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்

நாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.