புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...
பதிவு : மே 16, 2019, 01:31 PM
கஜா புயலின்போது பசுமையை இழந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சீரமைக்கப்படாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மன்னர் வாழ்ந்த மாளிகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த வளாகத்தில் பல்வேறு வகையான மரங்கள் செழிப்புடன் இருந்தன. அப்போது, குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலுக்கு பிறகு மாவட்ட முழுவதும் சின்னாபின்னமானது. அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மரங்களும் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் சேதமாகின. இதனால், அடர்ந்த வனம் போல் இருந்த ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது. பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்கள், பாதிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நிவாரணப் பணிகள் நடைபெற்றன. ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேதமான பல்வேறு வகையான மரங்கள் அப்புறப்படுத்தப் படவில்லை. மூலிகைச் செடிகளும் மீட்கப்படவில்லை. இதனால், ஆட்சியர் அலுவலக வளாகம் கோரமாக காட்சியளிக்கிறது. மரங்களின்றி நிழல் அற்றுப் போனதால், கடும் வெயிலை சமாளிக்க முடியாமல், மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். வீணாக மட்கும் மரங்களை அப்புறப்படுத்தி, புதிய மரக்கன்றுகளை நடுமாறு, ஆட்சியர் அலுவலகம் வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என அவர்கள் வேண்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"

13 views

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

153 views

பிற செய்திகள்

"பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து நிற்போம்" - தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

90 views

மத்திய சென்னை, திருச்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

33 views

39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றிய தி.மு.க.

39 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் பாராளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.

137 views

நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றி

நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

22 views

பாஜக, காங்கிரசுக்கு அடுத்த கட்சி திமுக...?

நாடாளுமன்ற மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

266 views

"அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது" : இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

991 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.