மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...
பதிவு : மே 16, 2019, 11:18 AM
20 கிராம மக்களின் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி, மதுராந்தகம் ஏரி... 2 ஆயிரத்து 211 ஏக்கர் பரப்பளவு கொண்ட  இந்த ஏரியை நம்பி, 20க்கும் மேற்பட்ட கிராமங் மக்கள்  விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால், சுமார் 10 மீட்டர் ஆழம் வரை ஏரி தூர்ந்து போய் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் போதிய மழை பெய்தாலும், ஏரியில் நீர் தங்குவதில்லை. ஏரி தூர்வாரப்பட வேண்டும் என்பது அந்த ஏரியை நம்பி விவசாயம் செய்யும் மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை. தமிழக அரசும் கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டமன்றத்தில்,  மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படும் என வாக்குறுதி அளித்தாலும், அதற்கான வேலைப்பாடுகள் எதுவும் தொடங்கவில்லை.....  இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீரின்றி மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது மதுராந்தகம் ஏரி. 

ஏரியின் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா...? தந்தி டி.வி. செய்திகளுக்காக மதுராந்தகத்தில் இருந்து செய்தியாளர் செந்தில்குமார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

633 views

பிற செய்திகள்

பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நினைவு தினம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன் வசீகரக் குரலால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவு தினம்

21 views

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் - ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுடன் சந்திப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

83 views

சேலம் : செக்கானூர் கதவணை பராமரிப்பு பணி தொடக்கம்

சேலம் மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேட்டூர், செக்கானூர் கதவணை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

18 views

நெல்லை: என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

9 views

குன்னூர் : 61வது பழக் கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது.

18 views

அரசு பள்ளிகளை பாதுகாக்க சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தாம்பரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் தொடங்கியது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.