சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்த மகாராஷ்டிர அரசு
பதிவு : மே 16, 2019, 10:45 AM
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய் தத்துக்கு, சிறை விடுப்பு அளித்ததுடன், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மகாராஷ்டிர அரசு முன்கூட்டியே விடுதலை அளித்துள்ளது பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் நடந்த  தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 மாதம் சிறை விடுப்பை அம்மாநில அரசு அளித்தது. அந்த சிறைவிடுப்பை தண்டனை காலமாக கருதியதுடன், அவருக்கு 8 மாத காலம் தண்டனை கழிவு வழங்கி, சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசு முன்கூட்டியே விடுதலையும் செய்துள்ளது. இது பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனு மூலம் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரிவுகளில் தண்டனை பெற்றிருந்தால், அதுபோன்ற வழக்குகளில் ஒருநாள் தண்டனை கழிவு வழங்க கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பின்னரும், 2016 பிப்ரவரி 25 ஆம் தேதி சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை மகாராஷ்டிர மாநில எரவாடா சிறை மேல்முறையீட்டு தகவல் அலுவலர் ஒப்புக் கொண்டு ஆவணங்களை அளித்துள்ளார்.  தண்டனை காலத்திற்கு முன்பே சஞ்சய் தத் மட்டும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது,  இந்தியாவில் தற்போது நிலவி வரும் சட்ட பாகுபா​ட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசு விடுதலை செய்தது போல தமிழக அரசும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே பேரறிவாளன் தரப்பு கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நடிகர் சஞ்சய் தத் நியமனம்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார்.

244 views

"சஞ்சய் தத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்" - ஆட்டோ ஓட்டுநர்

சஞ்சய் தத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

531 views

பிற செய்திகள்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

40 views

பாஜக அமோக வெற்றி... எதிர்கட்சி தலைவர் இல்லாத மக்களவை

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

599 views

பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மோடி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

433 views

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

1388 views

சிக்கிமில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

50 views

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.