முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு
பதிவு : மே 16, 2019, 07:22 AM
முன்ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன், மனு தாக்கல் செய்துள்ளார்.
கமல்ஹாசன் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விடுமுறை கால அமர்வில் வழக்கு தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க இயலாது எனவும், முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல் செய்யலாம் எனவும் கூறினார். 

இதனையடுத்து கமல்ஹாசன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எந்த ஆதாரமும் இல்லாமல் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக மனுவில் உறுதி அளித்துள்ள கமல்ஹாசன், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமலை நோக்கி செருப்பு வீச்சு : மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

கரூர் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்ட கமலை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

615 views

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

1730 views

பிற செய்திகள்

காய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

30 views

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

48 views

மோடி பிரதமராக இந்திய அளவில் தீர்ப்பு - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

37 views

தமிழகத்தில் பா.ஜ.க. தோற்றது தமிழகத்திற்கு தான் இழப்பு - நடிகர் எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது, தமிழகத்திற்கு தான் இழப்பு என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

284 views

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

18 views

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது? - செந்தில் பாலாஜி கேள்வி

அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

893 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.