"கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைய உள்ளது" - இராமமூர்த்தி,கொடிசியா தலைவர்
பதிவு : மே 15, 2019, 11:36 PM
மாற்றம் : மே 16, 2019, 06:01 AM
கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கண்காட்சி தலைவர் பாலு, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி குறித்து நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலு, கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா,டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட 12 வெளிநாடுகளையும் சேர்ந்த 575 தொழில் நிறுவனங்களும்,வல்லுநர்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.மேலும் 800 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். அதனை தொடர்ந்து பேசிய கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைய உள்ளதால் கண்காட்சி மூலம் வர்த்தகர்கள் தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை அறிந்து  அதற்கு தகுந்தாற்போல் தொழிலை மேம்படுத்தி கொள்ள முடியும் என்றார்.

பிற செய்திகள்

மீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

9 views

26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

9 views

10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்

விழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

10 views

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

கல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்த கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்தது.

14 views

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.