கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்
பதிவு : மே 15, 2019, 12:27 PM
இந்து தீவிரவாதம் என பேசிய கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட  பள்ளப்பட்டியில் கடந்த 12ஆம் தேதி பிரசாரம் செய்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியது புயலைக் கிளப்பியுள்ளது. இந்தப் பேச்சுக்கு, அதிமுக, பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் , திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்நிலையில், இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும்  வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன. கரூரில் இந்து முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சட்டப்பிரிவு 295ஏ, அதாவது இந்துக்களை இழிவு படுத்துதல், 153ஏ,  அதாவது பொது இடத்தில் மதக் கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம், சென்னை மடிப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கமலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அஸ்வினி குமார் தொடர்ந்த மனு இன்று விசாரிக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன்? என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் கூட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாமே? என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"எனது பேச்சை தடை செய்தால் ஊர் முழுக்க பரவும்" - கமல்ஹாசன்

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

30 views

கமலுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு : ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்தது பாட்டியாலா நீதிமன்றம்

கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.

41 views

அதிமுக வழக்கு : செப் .13 வரை கே.சி. பழனிசாமியின் புகார் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம்

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்த கே.சி. பழனிசாமி வழக்கு : செப் .13 வரை கே.சி. பழனிசாமியின் புகார் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம்

168 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

66 views

டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

840 views

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

77 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை

டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

95 views

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்

தேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்

38 views

ப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.