குடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள் : இடுகாடு அருகே குழாயில் வழிந்தோடும் தண்ணீர்
பதிவு : மே 15, 2019, 07:43 AM
திண்டுக்கல் அருகே குடிநீருக்கு அல்லாடும் பொதுமக்கள் இடுகாடு அருகே வழிந்தோடும் தண்ணீரை பிடித்து செல்வது வேதனை அளிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக வறட்சி 
நிலவி வருகிறது. இதனால் பல பகுதிகளில் பொது மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியில் கடந்த ஒரு மாதமாக குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் மிகவும் சிரமப்பட்டு 
வருகின்றனர். அங்குள்ள இடுகாடு அருகே குழாயில் வழிந்தோடும் 
தண்ணீரை குடிப்பதற்காக  பிடித்து செல்கின்றனர். ஆத்தூர் அணையிலிருந்து  திண்டுக்கல்லுக்கு குடிநீர் செல்லும் அந்த குழாயில் தண்ணீர் பிடிக்க மக்கள் ஆபத்தான  சாலையோரம் நிற்பது வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவிக்கின்றனர். ஆரியநல்லூர், கும்மம்பட்டி, கல்லுக்கடை, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தண்ணீர் பிடிக்க வருவதாகவும்  கூறும் பொதுமக்கள் அப்பகுதியில் குழாய்கள் அமைத்து குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிற செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

59 views

அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

18 views

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

25 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

12 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.