விழுப்புரம் அருகே இருபிரிவினர் இடையே மோதல்
பதிவு : மே 15, 2019, 07:36 AM
விழுப்புரம் அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் சாலை மறியல் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கமலகண்ணி அம்மன் ஆலய  தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாட்டு கச்சேரி நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட பிரிவினர் தொடர்பான பாடல் பாடப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர், கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

பாட்டு கச்சேரி தொடர்ந்த நிலையில்,  ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கல் வீசியும் , மோட்டார் சைக்கிள், கார், வீடு, குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை  அடித்தும் சேதப்படுத்தினர். 

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் செஞ்சி விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் போட்டி பார்த்து விட்டு ஊர் திரும்பிய போது விபத்து

சென்னையி​ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்த்துவிட்டு காரில் ஊர் திரும்பிய போது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

70 views

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

180 views

திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி

விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.

21204 views

குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

விழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.

163 views

பிற செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

59 views

அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

18 views

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

25 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

12 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.