இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு
பதிவு : மே 15, 2019, 12:47 AM
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் 4 பேரின் புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக,  இலங்கை அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், குண்டு வெடிப்பில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் படங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். தீவிரவாதிகள் குறித்த விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, குருனேகலா மாவட்டத்தில் உள்ள கோட்டம்பிட்டியா நகரில் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகள் மற்றும் மசூதிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.  இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 1983ம் ஆண்டில் இலங்கை ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைவு கூர்ந்துள்ள ராஜபக்சே, மீண்டும் ஒரு கருப்பு ஜூலை சம்பவம் நிகழ இடம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளா​ர்​.

பிற செய்திகள்

நாசா வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

29 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

53 views

உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

1316 views

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

45 views

கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.

21 views

கண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்..? - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...

சமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.