பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அமித்ஷா வாகனம் மீது தாக்குதல்
பதிவு : மே 14, 2019, 11:25 PM
மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில், அவரது வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள 9 மக்களவை தொகுதிகளில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, கொல்கத்தா தொகுதியில் அமித்ஷா தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பேரணி, நிறைவு பெறும் சமயத்தில், திடீரென மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அமித்ஷா சென்ற வாகனம் மீது கற்கள் மற்றும் கம்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கலவர கும்பலை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், கொல்கத்தா நகரில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. 

திரிணாமுல் காங்கிரஸ் மீது அமித்ஷா குற்றச்சாட்டுபேரணி நிறைவடைந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். பேரணிக்கு பிறகு, கொல்கத்தாவில் பேட்டியளித்த அவர், பாஜக பேரணி பிரமாண்டமான அளவில் நடந்ததாகவும், திட்டமிட்டபடி 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேரணி, குறிப்பிட்ட சரியான இடத்தில் நிறைவடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்த மேற்குவங்க பாஜகவினரை பாராட்டுவதாகவும் அமித்ஷா கூறினார். 

பிற செய்திகள்

கொரோனா மரணம் - கொடியது

புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவர் உடலை சவக்குழியில் தூக்கி வீசும் அவலம்

6 views

"பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை" - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்

15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது.

7 views

இந்தியா Vs சீனா - மோதல் முதல் பேச்சுவார்த்தை வரை...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

280 views

"சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு" - முதலமைச்சர் பினராயி விஜயன்

ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

63 views

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

53 views

கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

165 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.