போலி செல்போன்களை அதிக விலைக்கு விற்று மோசடி : அப்பாவி மக்களை ஏமாற்றும் வடமாநில கும்பல்
பதிவு : மே 14, 2019, 01:45 PM
கோவையில் அப்பாவி மக்களை ஏமாற்றி போலி செல்போன்களை விற்று வட மாநில கும்பல் ஒன்று நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது
கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் தனியாக நின்று கொண்டு இருக்கும் நபர்களை, குறி வைத்து வடமாநில கும்பல் மோசடியில் ஈடுபடுகிறது. செல்போனை கடந்த வாரம் புதுச்சேரியில் வாங்கியதாகவும், உறவினரின் அவசர மருத்துவ செலவுக்காக 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை, 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாகவும் அந்த மோசடி நபர்கள் கூறுகின்றனர். மேலும் செல்போனுக்கான ரசீது, ஐ.எம்.இ.ஐ எண் என அனைத்தையும் போலியாக தயாரிக்கும் இந்த கும்பல், செல்போனை ஆப் செய்து ஆன் செய்தால் பிரபல நிறுவனத்தின் பெயர் அதில் வருவது போலவும் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை நம்பி அப்பாவி மக்கள், ஆயிரம் ரூபாய் மதிப்புடைய போலி ஆண்ட்ராய்ட் செல்போனை, 6 ஆயிரம், 7 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கும்பலிடம் வாங்கி ஏமாறுகின்றனர். செல்போன்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்களை குறிவைத்து இந்த கும்பல் செயல்படுவதால், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மோசடி கும்பலை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

906 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

12 views

குழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.

6 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

27 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.