விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கடத்தல் : கடத்தல் பெண்ணை துரத்தி பிடித்த பொதுமக்கள்
பதிவு : மே 14, 2019, 01:42 PM
சேலத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை கடத்திச் சென்ற பெண்ணை பொதுமக்களே துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
சேலம் ஜான்சன் நகர் பகுதியில் நித்யா என்ற 9 வயது சிறுமியும், சரவணன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில்  விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த செல்வி  என்ற பெண், இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்த பெற்றோர்கள் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை காணவில்லை என அக்கம்பக்கத்தில் தேட தொடங்கினர். இதையடுத்து பொன்னம்மாபேட்டை பகுதியில் இரு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த செல்வியை பொதுமக்கள் மடக்கி பிடித்து கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். செல்விக்கு, கடத்தல் கும்பலுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

906 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

10 views

குழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.

5 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

26 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.