கணவனை கல்லால் அடித்துக் கொன்ற காதல் மனைவி : திருமணம் முடிந்த ஓரிரு நாளில் கசந்த காதல்...
பதிவு : மே 14, 2019, 12:35 PM
காதல் கணவனை, மனைவியே கல்லால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தலைச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமனின் மகன் சதீஷ்குமார். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய இவர், அப்பராசபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை காதலித்து கரம்பிடித்தார். 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து கணவன் சதீஷ்குமார் மீது மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில், கலைமதி புகாரளித்தார். அண்மையில் நடந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் வரும்படி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே, உறவினர் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமாருக்கும் எதிரே வந்த மனைவி கலைமதி மற்றும் அவரது தந்தை நாகராஜ் ஆகியோருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது, காதல் மனைவி கலைமதி, சதீஷ்குமாரின் தலையில் கல்லால் அடித்துள்ளார். இதில், நிலைகுலைந்த சதீஷ்குமாரின் தொடையில், கலைமதியின் தந்தை நாகராஜ் கத்தியால் குத்தி திருகியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்த சதீஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலன்றி அவர் உயிரிழந்தார். சதீஷ்குமாரின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை பிசைகிறது. 

பிற செய்திகள்

ஊரடங்கு காலத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்த மாணவர்கள்

உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

75 views

தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது.

15 views

சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்

கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

25 views

வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் காலஜந்தி பூஜை

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் வைகாசி விசாகத்தின் காலஜந்தி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

7 views

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி, 8 வழிச்சாலை திட்ட மேலாளர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

14 views

சத்குருவுடன் உரையாடிய கிரிக்கெட் வீரர் அஷ்வின்

சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இணையம் வாயிலாக உரையாடினார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.