சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து - கமல் சர்ச்சை பேச்சு
பதிவு : மே 14, 2019, 11:53 AM
மாற்றம் : மே 14, 2019, 11:55 AM
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என்று மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர பிரசாரம் செய்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பள்ளபட்டியில் உள்ள அண்ணா சிலை முன்பு பேசிய கமல்ஹாசன், காந்தியின் கொள்ளுப் பேரன் தாம் என்றும். அவரை சுட்டுக்கொலை செய்ததற்கு பின்னணி கேட்டு வந்திருப்பதாகவும் காட்டமாக பேசினார். தீயாக பரவிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனிடையே 2000 ஆவது ஆண்டில் வெளியான கமல்ஹாசனின் ஹேராம் படத்தில்,  கமல்ஹாசன் கோட்சேவின் கொள்கையை ஆதரிப்பவராக நடித்திருந்தார்.. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று, கமல்ஹசான் பேசியுள்ளது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது அரவக்குறிச்சி பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவத்தை மீண்டும் மீண்டும் கமல்ஹாசன் பதிவு செய்து வருகிறார். ஆனால், அவர் எதிர்பார்க்கும் இந்தியா தேசியக் கொடியை போன்று இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

காந்தி இறப்புச் சம்பவம் குறித்து ஹேராம் படத்துக்கு பிறகு கமல்ஹாசன் அடித்துள்ள டார்ச் லைட் வெளிச்சம், என்ன பிரதிபலிப்பை தரும் என்பதை காலம்தான் சொல்லும்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1614 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5938 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6701 views

பிற செய்திகள்

இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா? : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா, தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

15 views

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

91 views

தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை - வைகோ

தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

38 views

தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி பற்றாக்குறை காரணமாக தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

55 views

"மாநில சுயாட்சியை காக்க தீர்மானம் நிறைவேற்றுங்கள்" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவதால், மாநில சுயாட்சியை காக்க, பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

12 views

புதிய கல்வி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம்

இந்தி மொழியை மட்டும் பேச வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.