விடுதலைப்புலிகள் அமைப்பு - மேலும் 5 ஆண்டு தடை
பதிவு : மே 14, 2019, 11:09 AM
மாற்றம் : மே 14, 2019, 11:37 AM
விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட விரோத தடைச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை தொடர்ந்து விடுதலை புலிகள் அமைப்பு மீது மத்திய அரசு தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

952 views

பிற செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

166 views

"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்" - நிதின் கட்கரி உறுதி

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

680 views

முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.

65 views

சந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

782 views

ஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

இதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

26 views

முதல்வராக 30ஆம் தேதி பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெகன் மோகன் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.