டாஸ்மாக் கடையை மூடக் கோரி போலீஸ் காலில் விழுந்த பெண்கள்
பதிவு : மே 14, 2019, 01:14 AM
விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி இரண்டாவது நாளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பெண்கள் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இது குறித்து  உடையார்பாளையம் கோட்டாட்சியரும் அப்பகுதி பெண்களூம் பேச்சு வார்த்தை நடத்தினர். 3 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடை மூடப்படும் என கோட்டாட்சியர் கூறியதால் பெண்கள் மீண்டும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் காலில் விழுந்து பெண்கள் கடையை மூடுமாறு வலியுறுத்தினர்.போலீசார் டாஸ்மாக கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

பிற செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் திடீர் மாற்றம்

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

22 views

மழையும்... வெயிலும்... வானிலை நிலவரம்

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 views

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.

13 views

தனியார் மருத்துவமனை கட்டண விவரம் - அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

15 views

"ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது" - தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

145 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.