ஆரணி அருகே டிராக்டரிலிருந்து கீழே விழுந்த குழந்தை பலி
பதிவு : மே 13, 2019, 11:58 PM
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி, 4 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி, 4 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாரயணமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி தட்சிணாமூர்த்திக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில், டிராக்டர் ஓட்டுனர் ரவி என்பவர், தட்சிணா மூர்த்தியின் குழந்தை அவினேஷை வைத்து டிராக்டரை செலுத்தியுள்ளார். அப்போது, திடீரென்று அவினேஷ் கீழே விழுந்து டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சந்தவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

"சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தொற்று இல்லை" - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் 6 ஆயிரத்து 536 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் 84 சதவகித தெருக்களில் கொரோனா தொற்று இல்லை என, சிறப்பு அதிகரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2 views

கொரோனா காலத்திலும் மாஸ்க் அணிந்து திருடும் திருடர்கள் - இருசக்கர வாகனத்தை திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை புரசைவாக்கத்தில் மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

முதலமைச்சர் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு" காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

9 views

"மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப் பெற்ற மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2 views

கார்த்தி சிதம்பரம் எம்பி, அவரது மனைவி ஸ்ரீநிதி மேல் முறையீடு - வருமான வரித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு...

சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

கொரோனா இன்னும் தீவிரமாகும் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கொரோனாவின் தாக்கம், வரும் அக்டோபரில் உச்சத்தில் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

442 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.