ஃபானி புயலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
பதிவு : மே 13, 2019, 05:18 PM
ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 5 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடந்த பானி புயலால், பூரி மாவட்டத்தில் மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 90 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதேபோல கேந்திரபாராவில் 3 பேர், மயூர்பஞ்சில் 4 பேர், ஜெய்ப்பூரில் 3 பேர் கட்டக்கில் 6 பேர் மற்றும் கோர்தாவில் 9 பேர் பலியாகி உள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 25 பேர் சுவர் இடிந்து விழுந்ததிலும், 20 பேர் மரம், மின்கம்பங்கள் கீழே விழுந்ததில் சிக்கியும், 6 பேர் இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்த நிலையில், 13 பேர் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீடுகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி நாளை மறுநாள் தொடங்கி ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் ஜூன் ஒன்றாம் தேதி  முதுல் வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

956 views

பிற செய்திகள்

தங்க செயின் பறிப்பு - இளைஞர்களுக்கு தர்ம அடி

தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

8 views

கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா, நம்பிக்கை வாக்கெடுப்பு?

காங்கிரஸ், ம.ஜ.த மற்றும் பா.ஜ.க எம்எல்ஏக்கள் தனித்தனியே ஆலோசனை

14 views

சந்திரயான்- 2 கவுன்டவுன் தொடங்கியது

சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான கவுண்டவுன் இன்று மாலை ஆறு மணி 43 நிமிடத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

64 views

மண்ணில் வைத்து காய்கறிகள் வியாபாரம் - வியாபாரிகள் வேதனை

சின்னத்திருப்பதி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத‌தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

24 views

புதுச்சேரியில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுச்சேரியில் புற்று நோய் குறித்த மாரத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

10 views

வரசித்தி விநாயகர் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் - கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய கோவில் நிர்வாகம்

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.