தந்தி டிவியின் தாக்கம் - சிக்கல் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது...
பதிவு : மே 13, 2019, 04:34 PM
ராமாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில், தண்ணீர் பஞ்சம் நிலவிய நிலையில், தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிக்கல் கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கும் அவலம் குறித்து கடந்த 8ஆம் தேதி தந்திடிவி செய்தியில், நீரும் நிலமும் என்ற செய்திதொகுப்பு ஒளிப்பரப்பானது. அதில், ஏரிக்குள் ஊற்று அமைத்து, சொற்ப தண்ணீருக்காக நாள் கணக்கில் காத்திருக்கும் மோசமான நிலை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டது. இதை கவனத்தில் எடுத்த மாவட்ட நிர்வாகம், அந்த கிராமத்துக்கு லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிக்கல் பஞ்சாயத்துக்கு தனி அலுவலராக உள்ள BDO அதிகாரி மூலம், தண்ணீர் வழங்கப்பட்டது. தண்ணீர் வழங்கியதோடு, நேரடியாக வந்த அலுவலர் மேகலா, ஆட்சியரின் உத்தரவுப் படி, அங்குள்ள பாண்டியன் ஊரணியில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்க ஆய்வு செய்யவுள்ளதாக கூறினார். இதைத் தொடர்ந்து நீண்டநாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், செய்தியை ஒளிபரப்பிய தந்தி டிவிக்கும், நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும் அந்த கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

நீரும் நிலமும் : பாழடைந்த கிணற்றுக்குள் தண்ணீர் தேடும் சிவகங்கை கிராமங்கள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

34 views

பிற செய்திகள்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

120 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

11 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

39 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

47 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.