மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழிசை கண்டனம்
பதிவு : மே 13, 2019, 03:23 PM
தேர்தல் பிரசாரத்தில் இந்து தீவிரவாதம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு, பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் இந்து தீவிரவாதம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு, பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் நடுவில் நின்று கொண்டு, மத உணர்வுகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசியதாகவும், அவர் மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்சை வலியுறுத்தி உள்ளார். மகாத்மா காந்தியின் படுகொலையை கண்டித்து நாடே பதறியது, அவரை கொலை செய்த கொலையாளி தூக்கிலிடப்பட்டார் என குறிப்பிட்டுள்ள தமிழிசை, அதை இந்து தீவிரவாதம் என தற்போது தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விஷமத்தனமானது, ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். புதிய அரசியலை. முன்னெடுப்பதாக தெரிவித்து வரும் கமல்ஹாசன், பழைய நிகழ்வை கையில் எடுத்து, மதவிஷம் பரப்பி வருவது ஓட்டுக்காகத்தானே? என்றும், அரசியல்வேஷம் என்றும் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிற செய்திகள்

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

142 views

41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம் : விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு - டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

நாற்பத்தியொரு, சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

12 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது.

130 views

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

19 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

117 views

"மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்" - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.