குழந்தை திருமணத்தை தடுத்தி நிறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை
பதிவு : மே 13, 2019, 02:55 PM
சென்னை அயனாவரத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மகளின் திருமண வரவேற்பு அன்று வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர்  ஜெபசீலன். இவரின் மகள் சீபாராணிக்கு கடந்த 10 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் , திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கிளம்பிகொண்டிருந்த ஜெபசீலனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்  ஜெபசீலன் படுகொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி, 17 வயது சிறுமி ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதை அறிந்ததும், சென்ற போலீசார், சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். திருமணம் பற்றிய தகவலை போலீசாருக்கு யார் கொடுத்திருப்பார்கள் என்ற தகவல்களை திரட்டும் வெறித்தன வேலையில் சிறுமியின் குடும்பத்தினர் இறங்கியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ஜெபசீலன், சிறுமி திருமணம் பற்றிய தகவலை போலீசாரிடம் கூறியிருக்கலாம் என கருதி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுவே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று மாலை மீஞ்சூரில் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக ஜெபசீலனும் அவரின் மனைவியும் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். உறவினர்களை முன்பே மீஞ்சூருக்கு அனுப்பிய ஜெயசீலன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த கும்பல் ஒன்று, ஜெபசீலனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதை தடுக்க முயன்ற ஜெபசீலன் மனைவிக்கும் அரிவாள்வெட்டு விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. கொலையாளிகளின் குறியில் தப்ப இயலாத நிலையில், ஜெபசீலன் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அயனாவரம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார் என்ற சந்தேகத்தில் ஆட்டோ ஓட்டுநர் அவர் மகளின் திருமண வரவேற்பு தினத்தன்றே கொல்லப்பட்டது அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10070 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5198 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

8 views

விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

6 views

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

10 views

நூலகத்தில் "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

4 views

சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

24 views

கற்பித்தலில் புதிய வழிமுறைகள்... ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்

கரூர் அரசு தொடக்கப் பள்ளி கற்பித்தலில் புதிய வழிமுறைகளை கையாண்டு அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.