பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
பதிவு : மே 12, 2019, 04:45 PM
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜைகள் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் ஆறாம் நாளான17-ந்தேதி மாலை முத்துக்குமாராசாமி - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 18ம்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 

காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா


நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.கடந்த 8ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான அம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று விமர்சையாக நடைபெற்றது. பால்குட ஊர்வலத்தின் போது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோலாட்டமும், கும்மியும் அடித்து நடமாடினர்.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
நாகையில் உள்ள பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சித்திரை திருவிழா 3ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் செடில் மரத்தில் சுற்றப்பட உள்ளதால், நாளை காலை வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது. தோராட்டத்தின் போது, பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும், மக்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

பிற செய்திகள்

3 மாதத்திற்கு வாடகை வசூலிக்க தடை கோரி மனு - அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாட்டில் வாடகைதாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 views

கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவம் - அழகருக்கு மஞ்சள் நீராட்டு பூஜை

மதுரை கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக பெருமாளுக்கு மஞ்சள் நீராட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

4 views

தமிழகத்தில் சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? - சமய தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றிய கருத்துக்களை பெற இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

9 views

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

15 views

கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம்? - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்

கொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

29 views

ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

725 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.