நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வீட்டில் நள்ளிரவில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்
பதிவு : மே 12, 2019, 04:19 PM
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டத்தில் கணேசன் என்ற விவசாயி  புதிதாக கட்டி வரும் ஒரு வீட்டில் நள்ளிரவில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதில் வீட்டின் பின்பக்க அறைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை  மேற்கொண்டனர்.அப்போது வெடிக்காத 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.கணேசனின்  மகன்கள் சிவா , அருள் ஆகிய இருவர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் பாதுகாப்பிற்காக வெடிகுண்டுகள் வைத்திருந்தார்களா அல்லது யாரையும் கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டுகளை பதுக்கி இருந்ததார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்சம்பவத்தையடுத்து அங்குள்ள கீழப்பாட்டம் பகுதியில் போலீசார் நடத்தி அதிரடி சோதனையில்  பலர் அனுமதியின்றி டெட்டனேட்டர் குச்சி , வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடிப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச கருத்தரங்கில் தமிழக சிறுமி சாதனை - பள்ளி சார்பில் சிறுமிக்கு பாராட்டு விழா

சர்வதேச விண்வெளி கருத்தரங்கில் விருது பெற்று சாதனை படைத்த நெல்லை சிறுமிக்கு, பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது

138 views

மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

284 views

கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

416 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

0 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

27 views

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

182 views

"லட்சியங்களோடு மாணவிகள் வாழ வேண்டும்" - கமலாசத்தியநாதனை நினைவுகூர்ந்த முதலமைச்சர்

இந்தியாவில் முதல் பெண் பத்திரிகை தொடங்கிய கமலா சத்தியநாதனை போல் மாணவிகள் லட்சியத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

9 views

"ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

74 views

சிதம்பரம் மீதான நடவடிக்கை : "அரசியல் காழ்ப்புணர்வே காரணம்" - ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.