சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்
பதிவு : மே 12, 2019, 03:33 PM
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்க தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்க தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. பார்வையாளர்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லும் வண்ணபூரணி சூழல் சுற்றுலா திட்டம், கோடைகால தீ விபத்து போன்ற இடர்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, வண்ணபூரணி சூழல் திட்டம், 'மாயா சூழல் சுற்றுலா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் தற்போது ஹாசனூர்,  ஜீரஹள்ளி,  தலைமலை, கடம்பூர்,  மாக்கம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு விடுதிகளில் தங்கி புலிகள் காப்பகத்தினுள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.   

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.