பல இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் : திருட சென்றபோது சிக்கி கொண்ட கொள்ளையர்கள்
பதிவு : மே 12, 2019, 01:47 PM
ஒரு வீட்டில் நகை பணம் மற்றும் ஆடம்பர பொருட்களை திருடிய ஒரு கும்பல், அதை எடுத்துசெல்ல மற்றொரு வீட்டில் காரை திருடி சென்ற சம்பவம் திருவெறும்பூர் அருகே அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கோகுல்நகரை சேர்ந்த தர்மேந்திரன், கொல்கத்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவர், விடுமுறைக்காக, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கடந்த 3 ஆம் தேதி இரவு, மாயமானது. இது குறித்து தர்மேந்திரன், திருவெறும்பூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தர்மேந்திரன் வீட்டிற்கு அருகே உள்ள தியாகராஜன் வீட்டில் அதே தினத்தன்று மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், 2 எல்.இ.டி. டிவி,  ஹோம் தியேட்டர், அரை கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். தியாகராஜனும் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலையில் காரில் வந்த 3 மர்ம நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.  கார்த்திக், தமிழ்செல்வன், ஆனந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து, தியாகராஜன் வீட்டில் நகை, பொருட்களை திருடிவிட்டு, அதை எடுத்துசெல்வதற்காக, தர்மேந்திரன் காரை திருடியது விசாரணையில் தெரியவந்தது.புதுக்கோட்டை , ஆதனக்கோட்டை, கள்ளக்குறிச்சி என பல இடங்களில் திருடி வந்த இந்த மூவரும்,தற்போதுகூட,திருடுவதற்காகசெல்லும்போதே போலீசாரிடம் பிடிபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

பழனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகை திருட்டு

பழனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப்போலீசார் தேடி வருகின்றனர்.

50 views

பேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை

புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

70 views

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

169 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

45 views

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

165 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

12 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

53 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

59 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.