19 வயது இளைஞர் மைனர் பெண்ணுடன் காதல் திருமணம் : இளைஞர் கைது
பதிவு : மே 12, 2019, 11:45 AM
வேலூர் அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
குடியாத்தம் அடுத்த பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் அஜித் என்ற இளைஞன் வெல்டராக பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியில் வசிக்கும்  17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், காதலாக மாறியதில், இருநாட்களுக்கு முன் பெண்ணை அழைத்துச் சென்ற இளைஞர், திருப்பதியில் வைத்து திருமணம் செய்துள்ளார். வீடு திரும்பிய நிலையில், புதுப்பெண்ணை அஜித்குமார் வீட்டார் ஏற்கவில்லை. இதனால், மனமுடைந்த மணப்பெண், ஸ்டாப்ளர் பின்னை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனிடையே, 17 வயது மைனர் பெண்ணை கடத்தி ஏமாற்றியதாக, அஜித்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த குடியாத்தம் போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அஜீத்குமாரின் தாயார் ராணி மற்றும் அவரது உறவினர் அருண் ஆகியோரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

சிவகங்கை ஜோசியரை மிரட்டி, கோவை தம்பதியினர் 5 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

72 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

2448 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

821 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

27 views

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

146 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

12 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

44 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

56 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.