"சார்பு நீதிமன்றங்களில் காலி இடங்களை ஜூலை 16-க்குள் நிரப்புக" - தமிழக அரசுக்கும், மாவட்ட நீதிபதிகளுக்கும் உத்தரவு
பதிவு : மே 12, 2019, 05:24 AM
சார்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் ஜூலை 16ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சார்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் ஜூலை 16ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு மூப்பு அடிப்படையில் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ரேவதி என்பவர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், டீக்கா ராமன் ஆகியோர் அமர்வு, தேர்வுகள் நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்புமாறு உத்தரவிட்டனர். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், சேர்க்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள், பணி நிரந்தரம் கோர முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தேர்வு நடைமுறைகளில் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றிய காலத்துக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கி முன்னுரிமை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்த பணிகளை ஜூலை 16ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்,  இந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும்படி, தலைமை பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

906 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

3 views

குழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.

4 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

23 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.