குளுகுளு சீசன் - குவிந்த சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...
பதிவு : மே 12, 2019, 03:42 AM
கொடைக்கானலில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு குவிந்தனர். இதன் காரணமாக மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர்  தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய போலீசார் இருந்தும்  நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது .இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகரில் குவிந்து வரும்  சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில்  உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்ததுடன் ஏரியில் படகு சவாரி, ஏரியினை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர்.  பலர் தங்குவதற்கு அறைகள்கிடைக்காததன்  காரணமாக சாலை ஓரங்களிலும் வாகனங்களிலும் தங்கினர். தொடர் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிற செய்திகள்

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

49 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

27 views

திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

15 views

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

67 views

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 views

கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.