பல இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் : திருடிய பொருட்களை எடுத்து செல்ல காரை திருடியது அம்பலம்
பதிவு : மே 12, 2019, 12:52 AM
திருவெறும்பூர் அருகே ஒரு வீட்டில் நகை பணத்தை திருடி கொண்டு, அதை எடுத்துசெல்ல அருகில் உள்ள மற்றொரு வீட்டில் காரை திருடி சென்ற கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கோகுல்நகரை சேர்ந்தவர் தர்மேந்திரன். கொல்கத்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் இவர், விடுமுறைக்காக, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி இரவு, வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவரது கார் மாயமானது. இது குறித்து தர்மேந்திரன், திருவெறும்பூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே தர்மேந்திரன் வீட்டிற்கு அருகே உள்ள தியாகராஜன் வீட்டில் அதே தினத்தன்று மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், 2 எல்.இ.டி. டிவி,  ஹோம் தியேட்டர், அரை கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். தியாகராஜனும் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலையில் தர்மேந்திரன் காரில் வந்த 3 மர்ம நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கார்த்திக், தமிழ்செல்வன், ஆனந்தன் என்பதும், மூவரும் சேர்ந்து, தியாகராஜன் வீட்டில் நகை, பொருட்களை திருடிவிட்டு, அதை எடுத்துசெல்வதற்காக, தர்மேந்திரன் காரை திருடியதாக ஒப்புகொண்டுள்ளனர். இதேபோல, புதுக்கோட்டை, அதனக்கோட்டை, கள்ளக்குறிச்சி என பல இடங்களில் இவர்களை திருடியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது கூட, திருடுவதற்காக செல்லும்போதே இவர்களை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

954 views

பிற செய்திகள்

ஐஏஎஸ் தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தினத்தந்தி நிறுவனம் சார்பில் நடைபெற்றது

திருச்சியில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஸ்டெடி சர்க்கில் சார்பில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

6 views

"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

41 views

ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து

இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

27 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

13 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

352 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.